சொல்லாதது பாதி

சொல்லாதது பாதி,
சொல்ல முடியாதது இன்னொரு பாதி.
இரண்டுமே என்னிடமே இருந்து,
யாரிடமும் போகாமல்
கரைந்து கொண்டிருந்தன.

உன்னை சந்தித்த நொடியில்
சிறை திறந்தது —
அவை எல்லாம்
உன்னிடம் சேர
காத்துக் கொண்டிருக்கின்றன…

🩵🩵

No comments:

சொல்லாதது பாதி

சொல்லாதது பாதி, சொல்ல முடியாதது இன்னொரு பாதி. இரண்டுமே என்னிடமே இருந்து, யாரிடமும் போகாமல் கரைந்து கொண்டிருந்தன. உன்னை சந்தித்த நொடியில் சிற...