forgetting it's path

என் பாதையை மறந்த ஒரு விண்கல்லாய்
இருளின் வழியே
அமைதியில்லாமல் சீறிப் பறந்தேன்.

அப்போது —
நீ விண்மையின் தாலாட்டாக மாறி,
என் வீழ்ச்சியை மெதுவாக்கி,
என் வேகத்தை மௌனப்படுத்தி,
என்னுள் கொந்தளித்த
அனைத்து தீவிரப் புயல்களையும்
அமைத்தாய்.

உன் ஈர்ப்பில்,
குழப்பம் கூட
மூச்செடுக்கக் கற்றுக்கொண்டது;
என் வனமான பயணம்
இறுதியாக
ஓய்வெடுக்க நினைவுகொண்டது.

I was an asteroid that forgot its path, raging through the dark in restless flight. Then you became the cosmic sink— slowing my fall, quieting my velocity, soothing every fierce storm within me. In your gravity, chaos learned how to breathe, and my wild journey finally remembered how to rest.

🩵🩵

can survive but not thrive

காற்றில்லா நிலத்தில்
நான் உயிர் வாழலாம் —
ஆனால் வாழ்க்கை இல்லை.

உன் குரல் கேட்காமல்
நாட்கள் நகர்ந்தாலும்,
எதையோ தாங்கிக்கொண்டே
நான் நிற்கிறேன்…

ஆனால் —
இந்த வெறுமையின் பாரம்,
இந்த மௌனத்தின் அழுத்தம்,
என் நெஞ்சம் தாங்காது.

In a windless land, I could survive, but I couldn’t truly live.
Until I hear you, I somehow endure—but I never thrive.

🩵🩵

what is the use

தெரியாத பாதையில்
பூந்தோட்டம் இருந்தால் என்ன பயன்?
யாரோ விட்டுச் சென்ற
மண் அடிகளின் தடத்துக்கு
மேலான துணை வேறென்ன?

காதலுக்காகத் துடிக்கையில்
அழகால் என்ன பயன்?
புன்னகையுடன் அணைக்கும்
கைகளுக்கு மேலான
காதல் வேறென்ன?

தாகத்தில் தவிக்கும் போது
எப்போதோ பேசும்
மேகத்தை நம்ப முடியுமா?
சிறிது நீர் தந்த
கைகளின் உதவியை
எப்படி மறக்க முடியும்?

What use is a garden of flowers
on an unknown path?
Is there any help greater
than the muddy footprints
someone left behind?

When one longs for love,
what use is beauty?
Is there any love greater
than hands that comfort with a smile?

Can we ask for help
from a cloud that speaks only once in a while
to a thirst that burns?
How could we ever forget
the help of cupped palms
that offer even a little water?

🩵🩵

your love

நீரை உறிஞ்சுவதில்
மேகத்துடன் போட்டியிட்டால்
ஒரு பருத்தித் துண்டு தோல்வியடைவதே இயல்பு.
ஆனால் அந்தப் பருத்தித் துண்டு போலச் சிறியவனான என்னுள்,
உன் எல்லையற்ற காதலை நீ வைத்தாய்—
அதை முழுதும் உறிஞ்ச
என்னை அனுமதித்து,
யாருடைய இதயத்துக்கும் இல்லாத அளவு
என் இதயத்தை
மெல்ல விரிவாக்கினாய்.

A lump of cotton would always lose if it competed with a cloud in absorbing water.
Yet though I am as small as that lump of cotton, you placed your boundless love in me—
you let me absorb it fully, and quietly made my heart capable of holding more than any other.

🩵🩵

how you created world

ஒரு பிடி மண்ணை எடுத்துப் பார்த்தேன்—
என் உளங்கை அளவுதான் இருந்தது.
அதே உளங்கை அளவு நெஞ்சுக்குள்,
நீ எப்படி
ஒரு முழு உலகையே
உருவாக்கினாய்?

I took a handful of soil and looked at it—
it was only the size of my palm.
Within that same palm sized space in my heart,
how did you
create
an entire world?

🩵🩵

weight of your beauty

உன் அழகை பார்த்துப் பார்த்து
ஏறும் அந்தப் பாரத்தைத்
தாங்கிக் கொண்டே இருக்கிறேன்;
அதை இறக்கிவைக்க எந்த வழியும் இல்லை—
அதன் கீழே நசுங்கி
இன்பத்தை பெறுவதைத்தவிர…

By gazing at your beauty again and again,
I keep bearing the weight that keeps growing;
there is no way to set it down—
except to be crushed beneath it
and find my pleasure there...

🩵🩵

may be it dissolved

உன்னுள் விழுந்த இதயங்கள் எல்லாம்
ஒன்றொன்றாக மேலே மிதந்து விட்டன;
ஒன்றே ஒன்று மட்டும் தான் உள்ளே தங்கியது.
அவ்வளவு லேசான அந்த இதயம்
எப்படி ஆழத்தில் மிதக்காமல் இருக்கிறது
எனக்கும் புரியவில்லை…
உன்னை காதலித்து விழுந்ததல்லாமல்,
அது உன்னுள் கரைந்து விட்டதாலோ…

All the hearts that fell into you
rose to the surface, one by one;
only a single heart stayed within.
How such a light heart
can remain in such depths without floating
is something I still don’t understand…
It didn’t just fall in love with you;
perhaps it dissolved into you instead.

🩵🩵

ant's happiness

எறும்போட சந்தோஷமா இருந்தாலும்
என்னோட சந்தோஷமா இருந்தாலும்
பெரிய வித்தியாசம் ஒன்னும் இல்லதான்;
ஆனா அது சுவைத்த இனிப்பு வேறு,
நான் சுவைத்த இனிப்பு வேறு…

Whether it is an ant’s happiness
or my own happiness,
there isn’t really a big difference;
but the sweetness it tasted is different,
and the sweetness I tasted is different…

🩵🩵

how to find you

குளத்தில் இருக்கும் நிலாவாக இருந்தால்
குதித்து பிடித்திருப்பேன்…
ஆகாயத்தில் இருக்கும் நிலாவாக இருந்தால்
பறந்து பிடித்திருப்பேன்…

ஆனால் நீ —
கனவில் மட்டும் வரும் நிலா.
எந்த இரவின்
எந்த தூக்கத்தில் போய்
நான் உன்னைத் தேடுவேன்?

If you were the moon in the pond,
I would have jumped and caught you.
If you were the moon in the sky,
I would have flown and caught you.

But you—
you are a moon that comes only in dreams.
In which night,
in which sleep,
should I go searching for you?

🩵🩵

maxed out

உன் அழகை என் எண்ணங்களில் இன்னும் அதிகரிக்க மிக முயன்றேன்,
ஆனால் உன்னிடம் உள்ள அந்த அழகு ஏற்கனவே உச்சத்தில் இருக்கிறது போல…
அதனால் அதை மேலும் உயர்த்த

I tried my best to increase your beauty in my thoughts, but it seems what you already have is at its maximum; hence, I failed.



🩵🩵

you are a poem

வரிகளில்லை —
எழுத இயலாத ஒன்றாக அது.

அழகாக ஒன்று,
அன்பாக ஒன்று.

பக்கங்களுக்குள் கட்டிவைக்க
எந்தப் புத்தகத்துக்கும் இயலாதது.

தங்கிப் போகப் பிறந்தது அல்ல —
பறக்கவே பிறந்தது.

அது பேசுகிறது,
அது நடக்கிறது.

கவிஞன் இன்னும் கவனிக்காத
ஒரு கவிதை அது…

ஆனால் என் எழுதுகோலின் மையாகி,
எல்லாவற்றையும் எழுதச் செய்கிறது.

நான் எழுதுகோலை மட்டும் பிடித்திருக்கிறேன்;
எழுதுவது அதுவே.

ஒரு கவிதை…
ஒரு இனிய கவிதை..
நீ — என்றென்றும் நீடிக்கும் என் கவிதை

🩵🩵

బంగారంగా మారలేదు

அதன் மேல் எதை வைத்தாலும் தங்கமாக மாறிவிடும், என் மனதை வைத்தால் மோசம் போய்விட்டேன், தங்கமாக ஆகவில்லை… காதலாக மாறிவிட்டதே! Whatever you place ...