you are a poem

வரிகளில்லை —
எழுத இயலாத ஒன்றாக அது.

அழகாக ஒன்று,
அன்பாக ஒன்று.

பக்கங்களுக்குள் கட்டிவைக்க
எந்தப் புத்தகத்துக்கும் இயலாதது.

தங்கிப் போகப் பிறந்தது அல்ல —
பறக்கவே பிறந்தது.

அது பேசுகிறது,
அது நடக்கிறது.

கவிஞன் இன்னும் கவனிக்காத
ஒரு கவிதை அது…

ஆனால் என் எழுதுகோலின் மையாகி,
எல்லாவற்றையும் எழுதச் செய்கிறது.

நான் எழுதுகோலை மட்டும் பிடித்திருக்கிறேன்;
எழுதுவது அதுவே.

ஒரு கவிதை…
ஒரு இனிய கவிதை..
நீ — என்றென்றும் நீடிக்கும் என் கவிதை

🩵🩵

my moon

கைக்கு எட்டும் பூக்கள் உன் கூந்தலிலே ஆட,
உன் சிரிப்பினிலே அழகு என் கண்முன்னே நிழலாட,
யாருமில்லா இரவில் ஜொலிக்கும் நிலா நீ தானே,
நம் இருவரின் காதலுக்கு இனிய நேரம் இது தானே.

“அப்படிப் போகாதே” என்று இந்த இரவு சொல்கிறது,
“என்னிடமே போ” என்று கொஞ்சி கேட்கிறது,
மௌனமே இசையாய் நெஞ்சினில் ஒலிக்க,
உன் அருகிலே காலமே நின்று துடிக்க.

நீல வானத்தில் கரும் மேகங்களின் தோட்டத்தில்,
மலரும் நிலவொளிபோல் நம் காதல் மலரட்டும்,
கனவுகள் காற்றாய் நம்மைச் சுற்றி மிதக்க,
உண்மை மட்டும் இதயத்தில் நிலைக்கட்டும்.

இது இனிய வார்த்தைகளுக்கான நேரம், என் அரசியே,
காணாத அழகின்மேல் கொஞ்சம் கருணை காட்டுவாயே,
இந்தக் காதல் உன்னிலும் என்னிலும் தான் வாழ்வதால்,
உன் பின்னால் நிழலாய் நான் 
என்றும் இருப்பேன்.

🩵🩵

மூன்று அடி தான்

உன்னிடம் சேர மூன்று அடி தான்…
ஆனால்
மூன்று உலகங்களைச் சுற்றி வருவது
இதைவிட எளிதாகத் தோன்றுகிறது

🩵🩵

you should be there

கடவுள் சிலதைத் தேர்ந்தெடுக்க
எனக்கு வாய்ப்புக் கொடுத்தான்—

பகலா… இரவா,
வெளிச்சமா… இருட்டா,
இன்பமா… துன்பமா,
உள்ளேயா… வெளியேயா,
வேகமா… நிதானமா,
காதலா… சாதலா…

நான் கேட்டது
ஒரே ஒரு மாற்றம்தான்—

எதுவாக இருந்தாலும்,
அதிலே
நீ இருக்கணும் என்று…

🩵🩵

அழகு

விடிந்தாலும் நிலவைக் காண முடியும் அளவுக்கு உள்ள அழகு;
படுத்தாலும் அவள் நினைவு
சூரியனாய் எழுந்து
என் மனத்திற்கு காட்சி தரும் அழகு;
பேச்சையே நிறுத்தி
என்னை ஓமையாக்கிவிடும் அழகு;
என் நிழலையே கூட
பேசச் செய்து விடும் அழகு,
அவள் அழகு என்பதே
பார்க்கப்பட வேண்டிய ஒன்று அல்ல,
உள்ளே விழ வேண்டிய ஒன்று என்று..


🩵🩵

though I know the answer

இந்த உலகத்தில் கேள்வி கேட்பது தான் மிகவும் எளிது.
அதற்கு பதில் சொல்லுவது தான் மிகவும் கடினம்.
ஆனால் உன்னிடம்—
கேள்வி கேட்பதே எனக்கு மிகக் கடினமாக இருக்கிறது,
உன் பதில் நான் எதிர்பார்ப்பதுதான் என்று
உறுதியாகத் தெரிந்திருந்தாலும் கூட.

🩵🩵

I don't know how to fly

வார்த்தைகளால் பறக்கும் பறவையாய் நான்,
ஆனால் ஆகாயத்தில் பறக்கத் தெரியாதவன்.
அங்கே எந்தத் தடையும் இல்லை;
அப்படியிருக்க, எப்படி சேர முடியும் என்று
யோசித்தேன்…
கெஞ்சினேன்…
கொஞ்சினேன்…

அப்போது—
அத்தனை அற்புதங்களையும் சேர்த்துக்கொண்டு
அது பெண்ணாக மாறி
என்னிடம் இறங்கி வந்தது.

இனி நான் பறக்கவே வேண்டாம்;
என் வார்த்தைகளை அவளிடம் ஒப்படைத்து,
அவள் அழகை ரசிப்பேன்,
ரசித்துக்கொண்டே இருப்பேன்…

I am a bird that flies with words,
yet I do not know how to fly in the sky.
There are no barriers up there;
still, I wondered—
how could I ever reach it?

I thought…
I pleaded…
I coaxed…

Then—
gathering all its miracles within,
it transformed into a woman
and descended to me.

Now I no longer need to fly;
I place my words in her hands,
and I will admire her beauty,
and keep admiring it…

🩵🩵

new story

உரிமை இல்லாத உறவு பிறந்தது,
கனவிலே இல்லாத காட்சி மலர்ந்தது,
சத்தம் இல்லாமல் இடி விழுந்தது,
அந்த வெப்பத்திலே ஒரு மலர் பூத்தது…

🩵🩵

most difficult terrain

உன் அழகை ஆராய்வது தான்
இந்த உலகிலேயே கடினமான பயணம்.
எதையும் விட்டு விட முடியாது,
எதையும் ஏற்றத் தாழ்த்திப் பார்க்க முடியாது,
ஒவ்வொன்றும் சமமாகவே அழகாக இருக்கும்.
அதனால்தான் நான் உன்னைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பேன்,
உனது ஒவ்வொரு பகுதியையும் அறிந்துவிடும் வரைக்கும்.

The most difficult terrain to explore is your beauty.
No place can be left for another,
no part can be prioritised over the rest.
Everything feels equally beautiful.
So I keep looking at you,
until I know every bit of you.

🩵

if you are the ocean and I am the moon

நீ கடலா இருந்தால், நான் சந்திரனா இருந்தால்,
இந்த உலகம் சந்திரனைப் பார்க்க முடியாது;
என் வெண்ணிலா… உன்னைத் தொட முந்தியே
நான் உன்னுள் முழுகிப்போவேன்...

If you were the ocean and I were the moon,
this world would never get to see the moon;
because before my light even touches you,
I would drown myself in you completely.

🩵

a stone can turn into a seed

கல் கூட விதை ஆகாதா
உன் பார்வை பட்டால்?
என் இதயம் ஏற்கனவே ஒரு விதை…
உன் பார்வை பட்ட அந்த நொடியிலே
ஒரு பூங்காவனமாக மாறிவிட்டது.

Even a stone could turn into a seed
if your gaze ever touched it.
My heart was already a seed, ready to sprout…
and in the very moment your eyes fell on it,
it blossomed into a heavenly garden.

🩵

you are a poem

வரிகளில்லை — எழுத இயலாத ஒன்றாக அது. அழகாக ஒன்று, அன்பாக ஒன்று. பக்கங்களுக்குள் கட்டிவைக்க எந்தப் புத்தகத்துக்கும் இயலாதது. தங்கிப் போகப் பிற...